Sunday 2 December 2012

பஞ்சாப்: 48 மணிநேரத்திற்குள் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம்

மொகாலி, டிச. 2-பஞ்சாபின் மொகாலி புறநகரில் 48 மணிநேரத்தில் 10 மாடிக்கட்டிடம் கட்ட ஒரு தொழிலளதிபர் முடிவு செய்தார். பஞ்சாபின் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கட்டிடத்திற்கான அடிக்கலை நாட்டினார். இந்த சாதனைக் கட்டிடத்திற்கான வேலை வியாழன் மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. மறுநாள் வெள்ளியன்று மாலைவரை 7வது மாடிகள் கட்டிமுடிக்கப்பட்டன. முதல் 3 மாடி கட்டிடங்கள் 6 மணி நேரங்களில் கட்டிமுடிக்கப்பட்டது.

எடுத்துக் கொள்ளப்பட்ட 48 மணி நேர முடிவில் 10 மாடிக் கட்டிடத்தின் முழு வேலையும் முடிந்துவிட்டது. கட்டிடங்களில் வெளி ஜன்னல்களில் கண்ணாடிகள் எல்லாமும் கூட பதிக்கப்பட்டுவிட்டன. இதற்காக 200 டன் இரும்பு பொருட்கள் முன்கூட்டியே பின்னப்பட்டு செண்டிரிங் மற்றும் தூண்கள் தயாராக இருந்தன. மாடி அறைகளிலும் மரச்சாமான்கள் பொருத்தவேண்டிய வேலைகள் மட்டுமே அங்கு பாக்கியுள்ளன.

இச்சாதனையில் என்ஜினியர்கள், டெக்னிசியன்கள் மற்றும் வேலையாட்கள் என 200 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் செங்கல்லோ அல்லது மணலோ பயன்படுத்தாமல் பாலியுரித்திரின் நுரைகள் பயன்படுத்தி சுவர்களின் மேற்பகுதிகளில் ஒட்டப்படுள்ளன.

இது மற்ற சாதாரண கட்டுமாணப்பணியை போன்றும், நிறைய நேர மிச்சத்தையும் கொடுத்துள்ளது என்று 1000 கோடி முதலீட்டு நிறுவணத்தின் முதலாளி ஹர்பல் சிங் கூறியுள்ளார்.

No comments: