Monday 26 December 2011

உலகத்திலேயே மிக குள்ளமான பெண் !!!

நாகப்பூர் : உலகில் உயிரோடு உள்ள மிகக் குள்ளமான பெண் என்கிற கின்னஸ் சாதனை படைத்த இந்தியரான ஜோதி ஆம்க். இவர்தான் உலகில் உயிரோடு உள்ள மிகக் குள்ளமான சிறுமி என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி.  இவரின் உயரம் 24.3 அங்குலம் மாத்திரம். இந்தியாவின் நாகப்பூர் நகரத்தைச் சேர்ந்தவர்.

கடந்த ஆண்டு தனது 17 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். ஆனால் ஆண்டு இச்சிறுமி தனது பிறந்த நாளுடன் யுவதி என்கிற ஸ்தானத்தை அடைந்தார். உலகின் மிக குள்ளமான யுவதியாக கடந்த ஆண்டு இருந்தவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். அவரின் உயரம் 28.6 அங்குலம். ஜோதி அவரை விட 4.3 அங்குலம் குள்ளமான பெண்ணாக உள்ளா£. எனவே, உலகின் மிகக் குள்ளமான யுவதி என்கிற நாளை அடைந்த மகிழச்சியில் தற்போது அவர் இருப்பதாக தெரிகிறது.

உலகத்திலேயே மிக பெரிய கிறிஸ்துமஸ் கேக்...ஆ...


உலகின் மிக நீளமான கிறிஸ்துமஸ் கேக்கை சீனாவை சேர்ந்த 80 சமையல்காரரர்கள் சேர்ந்து தயாரித்துள்ளனர்.

எதை செய்தாலும் சற்று வித்தியாசமாகச் செய்து உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்பும் சீனாகாரர்கள் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு நாம் செய்யும் கேக்கை சீனா மட்டுமல்லாமல் உலகமே மறக்கக் கூடாது என்று நினைத்தார்கள். இதற்காக அவர்கள் 1,068 மீட்டர் நீளமுள்ள கிறிஸ்துமஸ் கேக்கை தயாரி்த்துள்ளனர். இதை மக்கள் பார்வைக்காக வைத்த பிறகு அந்த கேக்கை வெட்டி விற்பனை செய்யத் துவங்கினர். இதில் கிடைக்கும் பணம் ஷாங்காயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 குழந்தைகளின் கீமோதெரபி மருத்துவத்திற்கு வழங்கப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்தவர்கள் செய்த 207 மீட்டர் நீளமுள்ள கேக் தான் இதுவரை உலகின் மிக நீளமான கிறிஸ்துமஸ் கேக்காக இருந்தது. தற்போது சீனர்கள் தயாரி்த்துள்ள கேக் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday 25 December 2011

உலகில் உள்ள உயிரினங்களை படைத்தது கடவுளா?

அக்காலத்தில் இருந்த டைனோஸர் தற்காலத்தில் இல்லை. உயிரினங்களைப் படைத்தது கடவுள் என்றால், அழிந்த டைனோஸரை மீண்டும் அவற்றைக் கடவுள் படைத்திருக்கலாமே? ஏன் படைக்கவில்லை? இன்று உலகிலுள்ள அரிய உயிரினங்களை அறவே அழித்துவிட்டால், அவை மீண்டும் வராது (உருவாகாது). காரணம், அவை இயற்கையில் தோன்றியவை. கடவுள் படைப்பாக இருந்தால் மீண்டும் படைக்கப்படலாமே!

எனவே, உயிரினங்களை, உலகைப் படைத்தது கடவுள் அல்ல என்பது உறுதியாகிறது.
 
படைக்கப்பட்டது எதுவானாலும் அழிந்தால், மீண்டும் படைக்கப்படும். இயற்கையில் உள்ளவை எல்லாம் படைக்கப்படாதவை ஆகையால், அவை அழிந்தால் மீண்டும் வராது.

இவ்வுலகம், இவ்வுலகில் உள்ள யிரினங்கள் அனைத்தும் படைக்கப்படாதவை என்பதால் அவற்றைப் படைக்க கடவுளும் இல்லை என்பது உறுதியாகிறது

கடவுளின் கட்டுபாட்டில் இவ்வுலகமா?

இவ்வுலகில் நடக்கும் எல்லாம் கடவுள் செயல், அதுவன்றி ஓர் அணுவும் அசையாது என்றால், திடீரென்று வந்து அழிக்கும் சுனாமியும் நில நடுக்கமும் கடவுள் செயலா? ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை, அவர்களது உடைமைகளை ஒழித்துச் சிதைக்கும் இச்செயலை கருணையே உருவான கடவுள் செய்யுமா? கடவுள் கட்டுப்பாட்டில் இவ்வுலகம் இருந்தால் இந்த நிகழ்வுகள் நிகழுமா?

இயற்கையாய் நிகழ்ந்தால் மட்டுமே இவையெல்லாம் நடக்கும். கடவுள் இருந்து இவ்வுலகை நடத்தினால் இவையெல்லாம் நிகழவே நிகழாது!

கடவுளுக்கு இறுதி ஊர்வலம் நடந்த நாள் தெரியுமா?

உயிருள்ள ஆட்டின் உடலிலிருந்து ஒரு செல்லை எடுத்து செயற்கையாய் (குளோனிங்) ஓர் ஆடு உருவாக்கப்பட்ட அன்றே கடவுள் இல்லை என்பது உறுதியானது. கடவுளின் இறுதி ஊர்வலமும் முடிந்தது.

உடன் கட்டை எனும் கொடிய மூடபழக்கம்

உடன் கட்டையேற்றும் பழக்கத்துக்கு எதிராக பிரிட்டிஷ் பிரபு பெண்டிங் கொண்டு வந்த சீர்திருத்தச் சட்டத்தை விலக்கிக் கொள்ளக் கோரி  120 பார்ப்பனப் பண்டிதர்களும் கை ஒப்பமிட்டு அளித்த மனுவில் கண்டுள்ள வாசகம் இது.

”இந்தப் பாரம்பரியம் எங்கள் உயிரினும் மேலானது. உடன்கட்டையேறி உயிர் துறக்கும் விதவையானவள், உடலில் எத்தனை மயிர்க்கால்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள், 3 கோடி ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்வாள்.”

Thursday 14 April 2011

உனக்கு நீயே நீதிபதி

படத்தைப் பாருங்கள்; பக்தியின் விளைவு இதுதான். திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் பூக்குழி  திருவிழாவில் 6 மாத கைக் குழந்தையுடன் தீக்குண்டத்தில்  இறங்கிய பெண் பரிதாபமாக தவறி விழுந்து  தீக்காயமடைந்தார். அவர்களைக் காப்பாற்ற தீயணைப்புத்  துறையினர் விரைகின்றனர்.