Wednesday 8 July 2015

உனக்கு நீயே நீதிபதி





















புதிய
வீட்டையோ அல்லது பழைய வீட்டையோ வாங்கப் போகிறீர்களா? ஒரு பகுதியில் வீடுகள் என்ன
விலையில் விற்கப்படுகின்றன என்பதில் குழப்பமாக உள்ளதா? கவலையை விடுங்கள். இதற்கும்
அரசின் பத்திரப்பதிவுத் துறை இணையதளம் உதவுகிறது.
ஒரு
இடத்துக்கான சந்தை வழிகாட்டி மதிப்பையும்கூடப் பத்திரப்பதிவு இணையதளத்தில் பார்க்க
வழி உள்ளது. பலரும் மனையின் சந்தை வழிகாட்டி மதிப்பை மட்டும் பார்த்துவிட்டு
இருந்துவிடுவார்கள். வீடுகளுக்கும்கூடச் சந்தை வழிகாட்டி மதிப்பைப் பார்க்க வழி
உள்ளது. இதற்கான சுட்டியைச் சொடுக்கி, அங்கே கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப்
பதில் கூறினால் நிலத்தின் மதிப்பு மட்டுமின்றி கட்டிடத்துக்கான மதிப்பையும்
தெரிந்துகொள்ளலாம்.
வீடுகள்
பற்றிய மதிப்பை அறிய இந்த இணையப் பகுதியில் இரண்டு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
அடுக்குமாடி வீடு, தனி வீடு என இரு பிரிவுகள் உள்ளன. அடுக்குமாடி வீடு பகுதியில்
வீடு எந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது, யுடிஎஸ் எனப்படும் கட்டிடத் தளப்
பரப்பு எவ்வளவு, வீடு அமைந்துள்ள மொத்தச் சதுர அடி, வீடு பழையதா புதியதா, வீட்டின்
வயது, எந்தத் தளத்தில் வீடு உள்ளது, வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள மர வகை, கட்டுமானத்துக்குப்
பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், மேற்கூரை வகை, வீட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள
உயர் ரகக் கற்கள் வகைகள் பற்றித் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதற்கான பதில்கள்
தெளிவாக இருந்தால் வீடு அமைந்துள்ள மனையின் மதிப்பு, கட்டிடத்தின் மதிப்பு
தனித்தனியாகக் கொடுக்கப்படும். இதில் அதிகபட்சமாக 60 ஆண்டுகள் ஆன கட்டிடத்தின்
மதிப்பை மட்டுமே பார்க்க முடியும்.
இதே
போலத்தான் தனி வீட்டுக்கும் கேள்விகள் தொகுத்துக் கேட்கப்படுள்ளன. வீடு அமைந்துள்ள
எல்லை, வீட்டின் மொத்தப் பரப்பளாவு, வீடு பழையதா புதியதா, வீட்டின் வயது, தளம், மர
பயன்பாடு, கட்டுமானப் பொருள் பயன்பாடு, மேற்கூரை வகை, உயர் ரகக் கற்கள் பயன்பாடு
ஆகியவற்றுடன் சில வசதிகள் பற்றிய கேள்விகளும் கேட்கப்படுள்ளன. மின்சாரம் வசதி,
சுகாதார வசதி, குடி நீர் வசதி, வீட்டைச் சுற்றியுள்ள சுற்றுச்சுவரின்
விவரங்களையும் அளித்தால் வீட்டின் மதிப்பும், அந்த வீடு அமைந்துள்ள மனையின்
மதிப்பையும் தெரிந்துகொள்ளலாம்.
இந்த
மதிப்பானது நாம் ஒரு இடத்தில் வீட்டைப் பார்க்கவும், அதன் அடிப்படையில் வீடு விலை
குறித்துப் பேரம் பேசவும் வீடு வாங்குவது தொடர்பான முடிவுக்கு வரவும் ஓரளவுக்கு
உதவும். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதிலைப் பொறுத்தே நிலம்
மற்றும் வீட்டின் மதிப்பு கொடுக்கப்படுகிறது என்பதால், இந்த மதிப்பை அப்படியே
எடுத்துக்கொள்ளக் கூடாது.
சந்தை
நிலவரம், ரியல் எஸ்டேட் நிலவரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரசின் பத்திரப்
பதிவு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருப்பதால், இது வீடு வாங்க
உத்தேசித்துள்ளவர்களுக்கு ஓரளவு பயனுள்ளதாகவே இருக்கும்.

Sunday 21 September 2014

உண்மைகள் கசப்பது  ஏன் ?

Tuesday 4 December 2012

சேது சமுத்திரத் திட்டம் - ஒரு புதிய திருப்பம்! புதிய பாதையில் நிறைவேற்ற சாத்தியம் இல்லை



உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அளித்த நிபுணர் குழுவின் அறிக்கை
புதுடெல்லி, ஜூலை.3- சேது சமுத்திர திட் டத்தை மாற்றுப்பாதை யில் நிறைவேற்ற வாய்ப்பே இல்லை என்று வல்லுநர் குழு அறிக்கையை சுட்டிக் காட்டி, உச்சநீதிமன்றத் தில் மத்திய அரசு அறிவித்தது.
தமிழ்நாட்டில், ராமேசுவரத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2-ஆம் தேதி சேது சமுத்திரத் திட் டப்பணிகள் தொடங்கி, முழு வீச்சில் நடந்து வந்தன. சேது சமுத்திர திட்டப்பணிகள் 30 மீட்டர் அகலம், 12 மீட் டர் ஆழம், 167 கி.மீ. தொலைவுக்கு கால்வாய் வெட்டி நிறைவேற்று வது ஆகும்.
சேது சமுத்திர திட் டப்பணிகளை ஏற்கெ னவே திட்டமிட்டிருந்த பாதையில் நிறைவேற்றி னால், கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இருந்து இலங்கையை சுற்றாமல் சேது சமுத்திரக் கால் வாய் வழியாக வங்கக் கடலை நேராக அடை வதற்கு வழி பிறக்கும்.
சேது சமுத்திர திட்டப்பணிகள் நடந்து வந்தபோது, இந்தியா வுக்கும், இலங்கைக்கும் இடையே பாக் ஜல சந்திப்பகுதியில், ராம னின் வானரப் படையினால் கட்டப் பட்ட பாலம் என்று கதைக்கப்பட்டது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து சேது சமுத்திர திட்டத் துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால், ரூ.2 ஆயிரத்து 487 கோடி மதிப்பில் நிறைவேற்றப் படவிருந்த திட்டம் கிடப் பில் போடப்பட்டது.
மேலும், சேது சமுத் திர திட்டத்தை மாற் றுப்பாதையில் நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும்படி, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்ச வுரி குழுவை மத்திய அரசு அமைத்தது.
இந்தக் குழு தனது ஆய்வு அறிக்கையை மத் திய அரசிடம் சமர்ப் பித்துள்ளது.
இதற்கிடையே ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி, உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர், சேது சமுத்திர திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது ராமர் பாலத்தை பாரம் பரியச் சின்னமாக அறி விப்பது குறித்து பரிசீ லிக்க வேண்டும் என கோரி உள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனுவை விசா ரித்த உச்சநீதிமன்றம், இது குறித்த மத்திய அரசின் கருத்தை கேட் டது. அதற்கு மத்திய அரசு, இந்த விஷயத்தில் முடிவு எடுத்து அறிவிக்க விருப்பம் இல்லை என்றும், அது குறித்து உச்சநீதிமன்றமே  முடிவு எடுத்துக்கொள்ளலாம் என கூறி விட்டது.
இந்த நிலையில் சேது சமுத்திர திட்டம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல். டட்டு, சி.கே.பிரசாத் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் (மத்திய அரசு வழக்கறிஞர்) ரோஹிண் டன் நரிமன், பச்சவுரி குழுவின் 37 பக்க அறிக் கையை நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
மாற்றுப் பாதை உசிதமல்ல
ராமர் பாலத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப் படையில், மாற்றுப் பாதை தேடுவது என்பது ஏற்கத்தகுந்த யோசனை அல்ல. அது பொது நலன் அடிப்படையில் அமைந்ததும் அல்ல.
ஆய்வின் அடிப் படையிலும்,  நிர்வாக இழப்பு அணுகுமுறை யின் அடிப்படையிலும் மட்டுமல்லாமல் சுற்றுச் சூழல் மற்றும் பொரு ளாதார கோணத்திலும் பார்க்கிறபோது, 4 ஏ வரிசையில் (தனுஷ் கோடிக்கு கிழக்கில்) மாற்றுப்பாதை திட்டம் என்பது கேள்விக்குறி தான்.
விரிவான ஆய்வு களில் எழுந்த சந்தேகங் களை தொடர்ந்து, 4 ஏ வரிசையில் சேது சமுத் திர திட்டத்தை நிறை வேற்றுவது என்பது பொது நலனுக்கு உசித மான ஒன்றாக இருக் காது. இந்த மாற்றுத் திட்டம் சுற்றுச்சூழ லுக்கு ஆபத்தை ஏற்படுத் தும். இந்த நிலையில், எளிதில் பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழலில் மாற் றுத்திட்டத்தை நிறை வேற்றுவதற்கான சாத்தி யக்கூறுகள் தொடர்பாக மேலும் ஆய்வு தேவைப் படும்.
தற்போதைய நிலை யில், 4 ஏ வரிசையில் இந்த திட்டத்தை நிறை வேற்றுவது என்பது சுற்றுச்சூழலுக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக அந்த பகுதிகளில் (திட் டப்பகுதிகளில்) சுற்றுச் சூழலுக்கு ஆபத்தாக அமையும்.
இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள் ளது. அறிக்கையை தாக்கல் செய்த பின்னர் சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிண்டன் நரிமன், நீதிபதிகள் முன்னிலை யில் கூறியதாவது:-
பச்சவுரி குழு அறிக்கை
பிரபல சுற்றுச்சூழல் வல்லுநர் ஆர்.கே.பச்ச வுரி கமிட்டி, சேது சமுத் திர திட்டத்தை மாற் றுப்பாதையில் நிறை வேற்றுவது குறித்து பரி சீலித்துள்ளது. அதில், பொருளாதார ரீதியி லும், சுற்றுச்சூழல் ரீதியி லும் சேது சமுத்திர திட் டத்தை மாற்று வழிப் பாதையில் நிறைவேற்ற சாத்தியமில்லை என கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சொலிசிட்டர் ஜெனரல் ரோஹிண்டன் நரிமன் கூறினார்.

Sunday 2 December 2012

You are here: Home நல்லது நடந்தால் கடவுள் செயல் கெட்டது நடந்தால் விதி .... நல்லது நடந்தால் கடவுள் செயல் கெட்டது நடந்தால் விதி ....



ஆணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 176,000 கிலோமீட்டர். அதே வயதில் பெண்ணின் மூளையில் உள்ள மயலின் உடைய நரம்பிழைகளின் மொத்த நீளம் சுமார் 149,000 கிலோமீட்டர்.
மனித மூளையில் உள்ள சுமார் 50100 பில்லியன் (5000---10000 கோடி) நரம்பணுக்களில் (1011), சுமார் 10 பில்லியன் நரம்பணுக்கள் (1010) புறணிக் கோபுர உயிரணுக்கள் (cortical pyramidal cells). இவ்வுயிரணுக்கள் தமக்குள் சமிக்கைகளை (குறிகைகளை) அனுப்பி கொள்ள ஏறத்தாழ 100 டிரிலியன் (1014) நரம்பிணைப்பு களை பயன்படுத்துகின்றன.

நல்லது நடந்தால் கடவுள் செயல்
கெட்டது நடந்தால் விதி ....

அப்படியென்றால் இத்தகைய சிறப்பான மூளை மனிதனுக்கு எதற்கு ? ? பூசை செய்யவா ? ?

உலகைச் சுற்றிவரும் சூரியப் படகு

நீங்கள் படத்தில் காண்பது சூரிய சக்தியிலேயே  முழுமையாக இயங்கும் உலகின் மிகப்பெரிய  படகு. சுவிட்சர்லாந்து நாட்டில் வடிவமைக் கப்பட்ட இந்தப் படகு உலகைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறதாம்.
102 அடி நீளமும் 50 அடி அகலமும் கொண்ட இந்தப் படகில் மூன்று நாட்கள் தொடர்ந்து சூரிய ஒளி இல்லாவிட்டாலும் கூட பயணம் மேற்கொள்ளமுடியுமாம். அந்த அளவுக்கு சூரிய ஆற்றலைச் சேமிக்கும் லித்தியம் மின்கலம் இதில் உள்ளது. டுரானர் சோலார் பிளானட் எனப் பெயரிடப்பட்டுள்ள இது, தனது பயணத்தை மொனாக்கோவிலிருந்து தொடங்கியது.

சுறா மீனின் வாலைப் பிடித்தபடி ஆழகடலில் விளையாடும் இந்த சிறுவன்


சுறா மீனின் வாலைப் பிடித்தபடி ஆழகடலில் விளையாடும் இந்த ச்சிறுவனின் பெயர் ஈனால்.
இந்தோனேசியா நாட்டின் சுலோவெசி பகுதியின் பழங்குடிச் சமூகத்தை சேர்ந்தவன்.
எதேச்சையான நிகழ்வு ஒளிப்படப் போட்டியில் இந்த ஒளிப்படம் நேசனல் ஜியாக்ரபிக்கின் பரிசினைப் பெற்றுள்ளது.
இந்தக் காட்சியைப் படம் பிடித்தவர் ஜேம்ஸ் மோர்கான்.

பஞ்சாப்: 48 மணிநேரத்திற்குள் கட்டி முடிக்கப்பட்ட 10 மாடி கட்டிடம்

மொகாலி, டிச. 2-பஞ்சாபின் மொகாலி புறநகரில் 48 மணிநேரத்தில் 10 மாடிக்கட்டிடம் கட்ட ஒரு தொழிலளதிபர் முடிவு செய்தார். பஞ்சாபின் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த கட்டிடத்திற்கான அடிக்கலை நாட்டினார். இந்த சாதனைக் கட்டிடத்திற்கான வேலை வியாழன் மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. மறுநாள் வெள்ளியன்று மாலைவரை 7வது மாடிகள் கட்டிமுடிக்கப்பட்டன. முதல் 3 மாடி கட்டிடங்கள் 6 மணி நேரங்களில் கட்டிமுடிக்கப்பட்டது.

எடுத்துக் கொள்ளப்பட்ட 48 மணி நேர முடிவில் 10 மாடிக் கட்டிடத்தின் முழு வேலையும் முடிந்துவிட்டது. கட்டிடங்களில் வெளி ஜன்னல்களில் கண்ணாடிகள் எல்லாமும் கூட பதிக்கப்பட்டுவிட்டன. இதற்காக 200 டன் இரும்பு பொருட்கள் முன்கூட்டியே பின்னப்பட்டு செண்டிரிங் மற்றும் தூண்கள் தயாராக இருந்தன. மாடி அறைகளிலும் மரச்சாமான்கள் பொருத்தவேண்டிய வேலைகள் மட்டுமே அங்கு பாக்கியுள்ளன.

இச்சாதனையில் என்ஜினியர்கள், டெக்னிசியன்கள் மற்றும் வேலையாட்கள் என 200 பேர் ஈடுபட்டுள்ளனர். இதில் செங்கல்லோ அல்லது மணலோ பயன்படுத்தாமல் பாலியுரித்திரின் நுரைகள் பயன்படுத்தி சுவர்களின் மேற்பகுதிகளில் ஒட்டப்படுள்ளன.

இது மற்ற சாதாரண கட்டுமாணப்பணியை போன்றும், நிறைய நேர மிச்சத்தையும் கொடுத்துள்ளது என்று 1000 கோடி முதலீட்டு நிறுவணத்தின் முதலாளி ஹர்பல் சிங் கூறியுள்ளார்.