Monday, 26 December 2011

உலகத்திலேயே மிக பெரிய கிறிஸ்துமஸ் கேக்...ஆ...


உலகின் மிக நீளமான கிறிஸ்துமஸ் கேக்கை சீனாவை சேர்ந்த 80 சமையல்காரரர்கள் சேர்ந்து தயாரித்துள்ளனர்.

எதை செய்தாலும் சற்று வித்தியாசமாகச் செய்து உலகின் கவனத்தை தனது பக்கம் திருப்பும் சீனாகாரர்கள் இந்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு நாம் செய்யும் கேக்கை சீனா மட்டுமல்லாமல் உலகமே மறக்கக் கூடாது என்று நினைத்தார்கள். இதற்காக அவர்கள் 1,068 மீட்டர் நீளமுள்ள கிறிஸ்துமஸ் கேக்கை தயாரி்த்துள்ளனர். இதை மக்கள் பார்வைக்காக வைத்த பிறகு அந்த கேக்கை வெட்டி விற்பனை செய்யத் துவங்கினர். இதில் கிடைக்கும் பணம் ஷாங்காயில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 குழந்தைகளின் கீமோதெரபி மருத்துவத்திற்கு வழங்கப்படுகிறது.

கடந்த 2010ம் ஆண்டு பிரான்ஸை சேர்ந்தவர்கள் செய்த 207 மீட்டர் நீளமுள்ள கேக் தான் இதுவரை உலகின் மிக நீளமான கிறிஸ்துமஸ் கேக்காக இருந்தது. தற்போது சீனர்கள் தயாரி்த்துள்ள கேக் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: